கன்சர்வேடிலிருந்து விலகிய முன்னாள் நிதியமைச்சர் – ‘Reform UK’ வில் இணைந்தார்
பிரித்தானியாவின் முன்னாள் நிதி அமைச்சர் நாதிம் சஹாவி ( Nadhim Zahawi ) , கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
அத்துடன் Nigel Farage இன் ‘Reform UK’ கட்சியில் இணைந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
பிரித்தானியா நோய்வாய்ப்பட்ட நிலையில் உள்ளதாக தெரிவித்த அவர் Nigel Farage பிரதமரானால் மட்டுமே நாட்டை மீட்க முடியும்” என கூறியுள்ளார்.
அதிகரித்து வரும் வரிகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தனது இந்த முடிவு சக ஊழியர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம் என்று தெரிவித்த பிரித்தானியாவின் முன்னாள் நிதி அமைச்சர் (நாதிம் சஹாவி) Nadhim Zahawi நாட்டு மக்களுக்கு இதுவே அவசியமானது என்றும் கூறியுள்ளார்.





