இலங்கை முன்னாள் ஜனாதிபதி இல்லத்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்: 5ஆவது சந்தேகநபருக்கு பிணை!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தின் ஐந்தாவது சந்தேகநபருக்கு பிணையில் செல்ல கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு உத்தரவிட்ட நீதவான், எதிர்வரும் 11ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டுள்ளார்.





