இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழக்கு ! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை காரணமாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றாலும், வழக்கு விசாரணையின் போது கொழும்பு தேசிய மருத்துவமனையிலிருந்து ஜூம் மூலம் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று ரணில் விக்ரமசிங்கவை தலா 05 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவித்தது.
இந்த வழக்கு அக்டோபர் 29, 2025 அன்று விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)