இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு இன்று அதிகாலை மாற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து ஐ.சி.யு.விற்கு மாற்ற மருத்துவர்கள் பரிந்துரைத்ததாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் துணை இயக்குநர் டாக்டர் ருக்ஷன் பெல்லனா தெரிவித்தார்.
விக்ரமசிங்கேவின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
(Visited 2 times, 2 visits today)