ஆசியா

சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது புதிதாக 8 குற்றச்சாட்டுகள் – மொத்தம் 35

சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது நேற்றைய தினம் 8 புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 165 இன் கீழ் இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்கள் உத்தியோகபூர்வ நிலையில் தங்களுடன் தொடர்புடைய ஒருவரிடமிருந்து பரிசுகளை ஏற்றுக்கொள்ளும் குற்றமாகும்.

அதற்கமைய, சுமார் 18,956.94 சிங்கப்பூர் டொலர் மதிப்புள்ள பொருள்களை அன்பளிப்பாகப் பெற்றதாக அவர் மீதான புதிய குற்றச்சாட்டுகள் கூறுகின்றன.

லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு அது குறித்த தகவலை வெளியிட்டது. மதுபானம் golf விளையாட்டு மட்டைகள், சைக்கிள் உள்ளிட்ட பொருள்களை அவர் அன்பளிப்பாகப் பெற்றதாய் கூறப்படுகிறது.

ஈஸ்வரன் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது Lum Kok Seng என்பவரிடமிருந்து அந்தப் பொருள்களைப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

Lum Kok Seng என்பவர் Lum Chang Building Contractors எனும் கட்டடக் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராகும்.

அந்த நிறுவனத்துக்கும் நிலப் போக்குவரத்து ஆணையத்துக்கும் இடையே வர்த்தகப் பரிவர்த்தனை இடம்பெற்றுள்ளது.

அந்தக் குற்றங்கள் 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கும் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்றதாக லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு கூறியது.

இதேவேளை, ஈஸ்வரன் – இப்போது மொத்தம் 35 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். அதிகமான குற்றச்சாட்டுகளுக்கு தான் குற்றமில்லை என அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

(Visited 18 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!