சதொச முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் விளக்கமறியலில்
சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அதன் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக்க ரத்னமலல, எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வத்தளை நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் புதல்வர் ஜோஹான் பெர்னாண்டோ, சதொச லொறியைத் தனது தனியார் நிறுவனத் தேவைகளுக்காக முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் இந்திக்க ரத்னமலல இன்று கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, இக்குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஜோஹான் பெர்னாண்டோவும் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





