17 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பும் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன்
17 ஆண்டுகளாக லண்டனில்(London) சுயமாக நாடுகடத்தப்பட்டு வசித்து வரும், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின்(Khaleda Zia) மகன் தாரிக் ரஹ்மான்(Tariq Rahman) மீண்டும் வங்கதேசம்(Bangladesh) திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
80 வயதான தலைவர் கலீதா ஜியாவின் உடல்நிலை மோசமடைந்து செயற்கை சுவாசக் கருவியின்(ventilator) உதவியுடன் உள்ள நிலையில் வங்கதேச தேசியவாதக் கட்சி(BNP) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
“எங்கள் செயல் தலைவர் தாரிக் ரஹ்மான் டிசம்பர் 25ம் திகதி டாக்காவுக்குத் திரும்புவார் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று வங்கதேச தேசியவாதக் கட்சியின் பொதுச் செயலாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம்(Mirza Fakhrul Islam) கட்சியின் பொது கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சுயமாக நாடுகடத்தப்பட்ட 60 வயதான தாரிக் ரஹ்மான் 2008 முதல் லண்டனில் வசித்து வருகிறார்.




