சிரியாவில் இருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி – நாடு திரும்பிய 25,000க்கும் மேற்பட்ட மக்கள்
சிரியாவை சேரந்த அதிகமான மக்கள் வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டிற்குத் திரும்புவதாகத் துருக்கி தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு மக்கள் இவ்வாறு தாய் நாட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 15 நாட்களில் மட்டும் 25,000க்கும் மேற்பட்டோர் தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ளதாக அது கூறுகிறது.
2011ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியது. அப்போது முதல் கிட்டத்தட்ட 3 மில்லியன் அகதிகள் துருக்கியிவில் தஞ்சமடைந்துள்ளனர்.
துருக்கி ஜனாதிபதி ரிசப் தயிப் எர்துவானின் (Tayyip Erdogan) அரசாங்கத்திற்கு அது மிகப்பெரிய சவாலாக இருந்தது.
இரண்டு வாரங்களுக்கு முன் கிளர்ச்சியாளர்கள் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றினர். அசாத் குடும்பத்தாரின் 50 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது.
ஆட்சியில் ஏற்பட்ட மாற்றம் இடம்பெயர்ந்த சிரியா மக்களில் அதிகமானோரை மீண்டும் தயாகம் திரும்பத் தூண்டும் என்று கருதப்படுகிறது.