முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் சிகிச்சை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று அவருக்கு மேலும் பல பரிசோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவமனையின் துணை இயக்குநர் ருக்ஷான் பெல்லனா தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சிறப்பு மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும், நேற்று கண்டியில் செய்தியாளர் சந்திப்பை நடத்திய பதில் சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு தகவல் வழங்கியதற்காக கொழும்பு தேசிய மருத்துவமனையின் துணை இயக்குநர் மீது விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.





