இலங்கை – மஹிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரிக்கு விளக்கமறியல்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாக வந்போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது இருத் தரப்பினரதும் வாத பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதவான் அசங்க போதரகம, அவரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
28 மில்லியன் ரூபாய்க்கு மேல் சொத்துக்களை எவ்வாறு சம்பாதித்தார் என்பதை வெளியிட தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 7 times, 1 visits today)





