மறைந்த மன்மோகன் சிங்கின் நினைவுகளை நினைவு கூர்ந்த பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர்
பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் மஹ்மூத் கசூரி, தில்லியில் மறைந்த இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குடனான தனது உறவின் இனிய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.
லாகூரில் பிடிஐக்கு அளித்த பேட்டியில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு தன்னை அர்ப்பணித்த ஒரு மனிதராக டாக்டர் சிங் வரலாற்றில் நினைவுகூரப்படுவார் என்று கசூரி குறிப்பிட்டார்.
நவம்பர் 2002 முதல் நவம்பர் 2007 வரை பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றிய 83 வயதான கசூரி, சார்க் பிராந்தியம் முழுவதும் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கியதற்காக சிங்கிற்கு பெருமை சேர்த்தார்.
“அமிர்தசரஸில் காலை உணவும், லாகூரில் மதிய உணவும், காபூலில் இரவு உணவும் சாத்தியமாகும் நாளை எதிர்நோக்கியிருந்தேன்” என்று சிங்கின் கூற்றின் மூலம் இது சிறந்த எடுத்துக்காட்டு என்று அவர் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையின் போது முன்னெப்போதும் இல்லாத வகையில் முன்னேற்றம் ஏற்பட்ட செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருப்பது அதிர்ஷ்டம் என்று கசூரி குறிப்பிட்டார்.