ராணுவப் பாதுகாப்பில் இருந்து தனியார் வீட்டிற்கு குடிபெயர்ந்த நேபாள முன்னாள் பிரதமர் கே.பி ஒலி

பதவி நீக்கம் செய்யப்பட்ட நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, ராணுவப் பாதுகாப்பில் இருந்து ஒன்பது நாட்களுக்கு பிறகு முகாம்களில் இருந்து ஒரு தனியார் இடத்திற்கு மாறியுள்ளார்.
செப்டம்பர் 9 அன்று பதவி விலகிய கே.பி. சர்மா ஒலி, காத்மாண்டுவின் வடக்கே உள்ள சிவபுரி காட்டுப் பகுதியில் உள்ள ராணுவ முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
காத்மாண்டுவிலிருந்து 15 கி.மீ கிழக்கே உள்ள பக்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் வீட்டிற்கு சர்மா ஒலி குடிபெயர்ந்துள்ளார்.
செப்டம்பர் 9 அன்று நடந்த போராட்டத்தின் இரண்டாவது நாளின் போது எதிர்ப்பாளர்கள் பக்தபூரின் பால்கோட்டில் உள்ள அவரது வீட்டை எரித்து நாசப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 3 visits today)