பொய் பரப்புரைகளுக்கு எதிராக முன்னாள் எம்பி சிறீதரன் சட்ட நடவடிக்கை!

சமூகவலைத்தளங்களில் பாராளுமன்ற முன்னாள்உறுப்பினர் சிறீதரன் அவர்கள் மீது பரப்பப்படும் அவதூறு பிரசாரங்களுக்கு எதிராக பொலிசில் வழக்குத்தாக்கல் செய்திருக்கிறார்.
Facebook, TikTok போன்ற சமூகவலைத்தளங்களில் “Bar பொமிற் எடுத்தார் சிறீதரன்” போன்றவாறான பதிவுகள் மூலம் சிறீதரன் மீது அவதூறு பரப்பும் நோக்கோடு ஒரு தரப்பினால் தொடர்ச்சியாக கீழ்த்தரமான பொய் தகவல்களை பரப்பிவந்த நிலையில் குறித்த நபர்களுக்கு எதிராக கிளிநொச்சி பொலிசிலும், ஒட்டிசுட்டான் Cyber Crime பிரிவிலும் மற்றும் கொழும்பு Cyber Crime தலமையகத்திலும் குறித்த அவதூறு பரப்பிய நபர்களுக்கு எதிராக கடந்த 23.09.2024 ஆம் திகதி முறைப்பாடு செய்திருக்கிறார்.
பொலீசார் ஆரம்பித்த முதற்கட்ட விசாரணையில் ஒருவர் தாம் பதிவிட்ட செய்தி பொய்யானது என்பதை விசாரணையில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். மற்றும் ஒருவர் அதிக மதுபான பாவனையால் தனக்கு மனநிலை குழம்பிவிட்டத.
தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறேன் ஆதலால் தன்னை மன்னித்துவிடும்படி சிறீதரன் அவர்களிடம் தொலைபேசி அழைப்பெடுத்து கேட்டிருக்கிறார்.
ஆனால் குறித்த சட்ட நடவடிக்கை தொடர்பாக சிறீதரன் இறுக்கமான நிலைப்பட்டில் இருப்பதால் குறித்த விடயத்தை மறுத்திருக்கிறார்.