வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட முன்னாள் எம்.பி அபேரத்ன கைது
சமகி ஜன பலவேகய (SJB) ஹொரணை தொகுதி அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பி.டி. அபேரத்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரணை, பொருவடந்தவில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் எம்.பி., தனது வீட்டிற்கு வந்த நபர்களை பயமுறுத்தும் நோக்கில் தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது.
அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.





