இலங்கையின் முன்னாள் அமைச்சரின் பல கோடி பெறுமதியான சொத்துக்கள் ஏலத்தில்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் தயா கமகேவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களை ஜூலை 2 ஆம் திகதி காலை 10 மணிக்கு பொது ஏலத்தில் விட கொழும்பு வணிக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு வணிக உயர் நீதிமன்றத்தின் பதிவாளர், துணை நிதியாளர், செய்தித்தாள்களில் பொது விளம்பரம் வெளியிட்டு இதை அறிவித்துள்ளார்.
People’s Leasing and Finance நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 104,229,342 ரூபாய் தொகையை வசூலிக்கும் நோக்கில் பொது ஏலம் விட உத்தரவிடப்பட்டுள்ளது.
People’s Leasing and Finance நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 108,309,342 ரூபாய் தொகையில் சுமார் 4,080,000 ரூபாயை பிரதிவாதிகள் செலுத்தியுள்ளனர்.
மிகுதி பணத்தை மீட்டெடுக்கும் நோக்கில் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதியன்று வழங்கப்பட்ட தீர்ப்பிற்கமைய, ஏலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தயா குரூப் லிமிடெட், தயா Apparel எக்ஸ்போர்ட்டர் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் ஒலிம்பஸ் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ஏலத்தில் விடப்பட உள்ளதாக பொது அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.