இலங்கை செய்தி

இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் அதனை 10 வருட காலத்திற்கு ஒத்திவைத்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று இந்த உத்தரவிட்டுள்ளார்.

ஏ. எச்.எம் பௌசி குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவரை குறித்த குற்றத்திற்காக குற்றவாளி என அறிவித்து நீதிபதி இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

அதேபோல், 4 இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2010 இல், ஏ. எச். எம் ஃபௌசி அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக கடமையாற்றிய போது, ​​நெதர்லாந்திலிருந்து அமைச்சின் பேரிடர் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக கிடைத்த சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தை தனது தனிப்பட்ட பாவனைக்காக பயன்படுத்தியமை, அதற்காக அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளை ஈடுபடுத்தியமை மற்றும் வாகனத்தின் பராமரிப்புக்காக நிதியமைச்சின் சுமார் 10 இலட்சம் ரூபா பணத்தை செலவழித்தமை போன்ற 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஏ. எச். எம் ஃபௌசி தனது வழக்கறிஞர் மூலம் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

(Visited 12 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை