இலங்கை முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் ஒருவர் நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்லாந்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதியளித்து நிதி மோசடி செய்ததாக எழுந்த முறைப்பாட்டையடுத்து பிபிலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றதுடன், சந்தேகநபர் நாளை (29) கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்





