முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக வாக்குமூலம் வழங்க லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் முன்னாள் அமைச்சர் நாணயக்காரவின் வழக்கறிஞர் ஆகியோர் சமர்ப்பித்த சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம அவருக்கு பிணை வழங்கினார்.
அதன்படி, சந்தேக நபரை ரூ. 100,000 ரொக்கப் பிணையிலும் தலா ரூ. 4 மில்லியன் இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்
வழக்கு டிசம்பர் 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.