மும்பையில் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மீது துப்பாக்கி சூடு
மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சரும், NCPயின் அஜித் பவார் பிரிவைச் சேர்ந்தவருமான பாபா சித்திக், மும்பையின் பாந்த்ராவில் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபா சித்திக் மீது பாந்த்ரா கிழக்கு MLAவாக இருக்கும் அவரது மகன் ஜீஷனின் அலுவலகத்தில் மூன்று தோட்டாக்கள் சுடப்பட்டதாக தெரிவிகிக்கப்பட்டுள்ளது.
சித்திக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குறைந்தபட்சம் ஒரு தோட்டாவானது சித்திக் மார்பில் தாக்கியதாகவும், அவருக்கு தொடர்ச்சியான இருதய நுரையீரல் புத்துயிர் (CPR) அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
பாந்த்ரா வெஸ்டிலிருந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த சித்திக், 48 ஆண்டுகளாக காங்கிரஸுடன் தொடர்புடையவர், பிப்ரவரியில் அக்கட்சியில் இருந்து விலகி அஜித் பவாரின் என்சிபியில் சேர்ந்தார். ஜீஷன் சித்திக் காங்கிரஸில் இருந்து ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டார்.