உலகம்

101 வயதில் காலமான ஜப்பானின் முன்னாள் பிரதமர் டோமிச்சி முரயாமா (Tomiichi Murayama)

1990களின் நடுப்பகுதியில் நாட்டின் தலைவராகப் பணியாற்றிய முன்னாள் ஜப்பானியப் பிரதமர் டோமிச்சி முரயாமா(Tomiichi Murayama),இன்று(17) தனது சொந்த ஊரான ஒய்டாவில்(Oita) 101 வயதில் காலமானார் என்று கியோடோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மார்ச் 3, 1924 அன்று ஒய்டா மாகாணத்தில் பிறந்த முரயாமா, 1993 இல் ஜப்பான் சோசலிஸ்ட் கட்சியின் தலைவரானார் மற்றும் ஜூன் 1994 முதல் ஜனவரி 1996 வரை பிரதமராகப் பணியாற்றியுள்ளார்.

ஆகஸ்ட் 15, 1995 அன்று, இரண்டாம் உலகப் போரின் முடிவின் 50 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில்,போர்க்கால ஆக்கிரமிப்புக்கு மன்னிப்பு கேட்கும் விதமாக முரயாமா தனது பெயரில் அமைச்சரவை ஒப்புதல் அளித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்த அறிக்கையில் ஜப்பான் தவறான தேசியக் கொள்கையைப் பின்பற்றி, போருக்குச் செல்லும் பாதையில் முன்னேறி, அதன் காலனித்துவ ஆட்சி மற்றும் ஆக்கிரமிப்பு மூலம், பல நாடுகளின் மக்களுக்கு, குறிப்பாக ஆசிய நாடுகளுக்கு பெரும் சேதத்தையும் துன்பத்தையும் ஏற்படுத்தியது என்று குறிப்பிட்டிருந்தார்.

முரயாமாவின் அறிக்கை ஆழ்ந்த வருத்தத்தையும், இதயப்பூர்வமான மன்னிப்பையும் தெரிவித்தது,இதில் அவர் ஜப்பானின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கேட்க முன் என்றுமில்லாதபடியான வார்த்தைகளை(unprecedented language) பயன்படுத்தியிருந்தார்.

இந்த அறிக்கை சர்வதேச சமூகத்தால் பரவலாக அங்கீகரிக்கப்பட்டது.

முரயாமா 2000 ஆம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்று அமைதிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

(Visited 41 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்