ஊழல் குற்றச்சாட்டில் இந்தோனேசிய முன்னாள் அமைச்சர் மீது வழக்குப் பதிவு
இந்தோனேசிய(Indonesia) வழக்கறிஞர்கள், முன்னாள் கல்வி அமைச்சரும் ஸ்டார்ட்அப் கோஜெக்கின்(startup Gojek) இணை நிறுவனருமான நதியம் மகரிம்(Nadiem Makarim) மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
இது தொற்றுநோய் காலத்தில் முறையற்ற மடிக்கணினி கொள்முதல் காரணமாக நாட்டிற்கு $125.64 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியது.
2019ம் ஆண்டு ரைடு-ஹெய்லிங்(ride-hailing) நிறுவனமான கோஜெக்கின் தலைமை நிர்வாகி பதவியை ராஜினாமா செய்து 2024 வரை கல்வி அமைச்சராக பதவி வகித்த மகரிம் 2020 மற்றும் 2022 க்கு இடையில் பாடசாலைகளுக்கான Chromebook மடிக்கணினிகள் மற்றும் Chrome OS வாங்கியதன் மூலம் சுமார் $48.34 மில்லியன் சம்பாதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மகரிம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.





