இந்தியா செய்தி

ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணம்

குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் செல்லும் பயணிகள் விமானம் இன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உட்பட 242 பேர் இருந்தனர்.

விமானம் கிளம்பியதும் அந்த விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணியும் பயணித்துள்ளார். அவர், லண்டனில் வசிக்கும் தன் மகளை பார்ப்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளார்.

விபத்தில் சிக்கிய விமானத்தின் பயணிகள் பட்டியலில் அவரது பெயர் இருந்தது, அவரது போர்டிங் பாஸ் விபரம் ஆகியவை சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

அவர் விபத்தில் பலத்த காயத்துடன் உயிரிழந்து விட்டதாக, தகவல் வெளியானது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் பலர், ஆமதாபாத்தில் ரூபானி வீட்டில் குவிந்துள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி