கன்சர்வேடிவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ரோசிண்டெல் – ரிஃபார்ம் யுகேவில் இணைந்தார்
ரோம்ஃபோர்டு (Romford) தொகுதி எம்.பி.யும் முன்னாள் நிழல் அமைச்சருமான ஆண்ட்ரூ ரோசிண்டெல்(Andrew Rosindell), கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்து சீர்திருத்த UK கட்சியில் இணைந்துள்ளார்.
கன்சர்வேடிவ் கட்சி (Conservative Party) உறுப்பினர்கள் கடந்த அரசாங்கத்தின் தவறுகளுக்கு பொறுப்பேற்க மறுப்பதாகவும், நாட்டின் சரிவுக்கு காரணமாக உள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு நைகல் ஃபரேஜுடன் (Nigel Farage) கலந்துரையாடியதைத் தொடர்ந்து அந்த கட்சியில் இணைந்ததாக ரோசிண்டெல் (Rosindell) தெரிவித்துள்ளார்.
அவர் சிறந்த தேசபக்தர் எனவும் தனது கட்சிக்கு அவர் மிகவும் முக்கியமானவர் எனவும் ஃபரேஜ் தெரிவித்துள்ளார்.
59 வயதான ரோசிண்டெல், ரோம்ஃபோர்டு மக்களின் கருத்துகள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
இவர் சீர்திருத்த யுகே கட்சியில் இணைந்த மூன்றாவது கன்சர்வேடிவ் எம்.பி ஆவார்.
இதனால் ரிஃபார்ம் யுகே, காமன்ஸ் சபையில் ஐந்தாவது பெரிய கட்சியாக மாறியுள்ளது.
கன்சர்வேடிவ் தலைவர் கெமி படேனோக், இந்த விலகலை சதி என விமர்சித்தார். மற்றொரு பக்கம், ரிஃபார்மில் இணைந்த ராபர்ட் ஜென்ரிக், இது சிறந்த செய்தி என்றும், இதுபோன்ற இன்னும் பல எம்.பி.க்கள் வரலாம் என்றும் கூறினார்.
தொழிலாளர், லிபரல் டெமாக்ராட் மற்றும் கன்சர்வேடிவ் கட்சிகள், இந்த விலகலை சுயநல அரசியல் நடவடிக்கை என விமர்சித்துள்ளன.
தொழிலாளர் கட்சி, “தோல்வியடைந்த டோரி அரசியலின் சுமையை ரிஃபார்ம் ஏற்றுக்கொள்கிறது என கடுமையாக விமர்சித்தது.
2001 முதல் ரோம்ஃபோர்டு எம்.பி.யாக உள்ள ரோசிண்டெல்லின் பெரும்பான்மை கடந்த தேர்தலில் பெரிதும் குறைந்திருந்தது.
இந்நிலையில் சாகோஸ் தீவுகளை மொரீஷியஸுக்கு ஒப்படைத்தது உள்ளிட்ட விவகாரங்களில் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் தோல்வியடைந்ததாகவும்,
அதுவே தன் விலகலுக்கான காரணங்களில் ஒன்று என்றும் அவர் கூறினார்.





