இலங்கை செய்தி

சி.ஐ.டியின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அவர் இன்று பிற்பகல் (10) கைது செய்யப்பட்டுள்ளார்.

கலைப்பொருள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குண்டசாலையில் உள்ள உடமலுவ தொல்பொருள் தளத்தில், மன்னர் வீர பராக்கிரம நரேந்திரசிங்கவின் அரண்மனையின் நுழைவாயில் படிகளுக்கு அருகில் அமைந்திருந்த, 300 ஆண்டுகளுக்கும் மேலான சிற்பங்கள் பொறிக்கப்பட்ட, 1,000 கிலோ கிராமுக்கும் அதிக நிறையுடைய ‘சண்டகலா’ என்ற கலைப்பொருள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இடம்பெற்று வரும் விசாரணையுடன் தொடர்புடையதாக இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!