ஆசியா செய்தி

சீனாவுக்காக உளவு பார்த்த முன்னாள் CIA அதிகாரிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சீன அரசாங்கத்திற்காக உளவு பார்த்ததற்காக முன்னாள் மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA) அதிகாரிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹொனலுலுவைச் சேர்ந்த 71 வயதான அலெக்சாண்டர் யுக் சிங் மா, ஆகஸ்ட் 2020 இல், அமெரிக்க ரகசியங்களை சீனாவுக்கு விற்றதாக ஒரு இரகசிய FBI ஏஜெண்டிடம் ஒப்புக்கொண்ட பின்னர் கைது செய்யப்பட்டார் என்று அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

சீனாவின் ஷாங்காய் ஸ்டேட் செக்யூரிட்டி பீரோவில் பணியமர்த்தப்பட்ட உளவுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்களை வழங்குவதற்கு அவர் உதவினார் என்று ஒப்புக்கொண்டார்.

அலெக்சாண்டர் மாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் மேற்பார்வையிடப்பட்ட விடுதலை அறிவிக்கப்பட்டது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, ஹாங்காங்கில் பிறந்த அமெரிக்க குடிமகன் அலெக்சாண்டர் மா, 1982 முதல் 1989 வரை CIAவில் பணியாற்றினார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!