ஆசியா செய்தி

$37 மில்லியன் லஞ்சம் வாங்கிய முன்னாள் சீன அமைச்சருக்கு மரண தண்டனை

சீனாவின் முன்னாள் வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகார அமைச்சர் டாங் ரென்ஜியனுக்கு, ஜிலின் மாகாணத்தில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2007 முதல் 2024 வரை பல்வேறு பதவிகளில் இருந்த டாங் ரென்ஜியன், 268 மில்லியன் யுவான் (37.6 மில்லியன் டாலர்) மதிப்புள்ள பணம் மற்றும் சொத்து என லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்

நீதிமன்றம், அமைச்சின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைக் குழுவின் செயலாளராகவும் பணியாற்றிய டாங்கின் வாழ்நாள் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டதாகக் தெரிவித்துள்ளது.

மேலும், அவரது அனைத்து தனிப்பட்ட சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும், சட்டவிரோத ஆதாயங்கள் மீட்கப்பட்டு தேசிய கருவூலத்திற்கு மாற்றப்படும் என்று நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!