நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி பதவியேற்பு
இளைஞர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி முதல் பெண் பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.
அதிபர் ராம் சந்திரா பவுடல், நேபாள ராணுவத் தலைவர் அசோக் ராஜ் சிக்டெல் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட நிலையில், அதிபர் மாளிகை இந்த முடிவை முறையாக அறிவித்துள்ளது.
சுஷிலா கார்கியை தேர்வு செய்ய ஜென் இசட் போராட்ட இயக்க பிரதிநிதிகள் சம்மத் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக இளைஞர்கள் கடும் போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக பிரதமர் பதவி விலகினார்.
போராட்டத்தில் 51 பேர் உயிரிழந்தனர். அரசு கட்டிடங்கள், ஓட்டல்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. சிறைச்சாலைகள் உடைக்கப்பட்டு கைதிகள் தப்பி ஓடினர்.





