இலங்கை செய்தி

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CEYPETCO) முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2017–2018 ஆண்டுகளுக்கான எரிபொருள் கொள்முதல் செய்வதற்காக திட்டமிடப்பட்டிருந்த மூன்று நீண்டகால டெண்டர்களை இரத்து செய்து, அதற்கு பதிலாக அதிக விலைக்கு ஸ்பாட் டெண்டர்களை மேற்கொண்டதன் மூலம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கிட்டத்தட்ட 800 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!