உக்ரைனின் பொருளாதார ஆலோசகராக கனடாவின் முன்னாள் துணைப் பிரதமர் நியமனம்
உக்ரைன்(Ukraine) ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelensky), கனடாவின்(Canada) முன்னாள் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்டை(Chrystia Freeland) தனது பொருளாதார மேம்பாட்டு ஆலோசகராக நியமித்துள்ளார்.
“கிறிஸ்டியா இந்த விஷயங்களில் மிகவும் திறமையானவர் மற்றும் முதலீட்டை ஈர்ப்பதிலும் பொருளாதார மாற்றங்களை செயல்படுத்துவதிலும் விரிவான அனுபவம் உள்ளவர்” என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
உக்ரேனிய வம்சாவளியைக் கொண்ட கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், 2019 மற்றும் 2024க்கு இடையில் கனேடிய துணைப் பிரதமராகப் பணியாற்றினார்.
கனடாவின் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் அவர் ஒரு தீவிர சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உக்ரைனின் மறுசீரமைப்புக்கான ஒட்டாவாவின்(Ottawa) சிறப்புத் தூதராகவும் உள்ளார்.





