முன்னாள் பிரிட்டிஷ் துணைப் பிரதமரும் புதிய தொழிலாளர் இயக்கத்தின் தலைவருமான ஜான் பிரெஸ்காட் காலமானார்!
முன்னாள் பிரிட்டிஷ் துணைப் பிரதமரும் புதிய தொழிலாளர் இயக்கத்தின் தலைவருமான ஜான் பிரெஸ்காட் தனது 86 வது வயதில் காலமானார்.
அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட பிரெஸ்காட் ஒரு பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டோனி பிளேயரின் அரசாங்கத்தின் கீழ் அவர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக துணைப் பிரதம மந்திரியாக பணியாற்றியுள்ளார்.
மேலும் நவீனமயமாக்கப்பட்ட தலைமையின் முகத்தில் தொழிற்கட்சியின் பாரம்பரிய விழுமியங்களின் பாதுகாவலராகக் காணப்பட்டார்.
அத்துடன் சுற்றுச்சூழல், போக்குவரத்து மற்றும் பிராந்தியங்கள் குறித்த அரசாங்கக் கொள்கையை மேற்பார்வையிட்டார், காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச கியோட்டோ நெறிமுறை பேச்சுவார்த்தையை நடத்த உதவியவராவார்.
(Visited 3 times, 1 visits today)