சிலியை அச்சுறுத்தும் காட்டுத் தீ : மக்களை வெளியேற்ற உத்தரவு!
சிலியில் பரவி வரும் இரண்டு காட்டுத்தீ காரணமாக குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சிலி அரசாங்கம் உடனடி ஆபத்து உள்ள பகுதிகளில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டது, குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான பகுதிகளில் தஞ்சம் அடையுமாறு வலியுறுத்தியது.
சேதம் அல்லது வெளியேற்றப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்படவில்லை.
தலைநகர் சாண்டியாகோவின் தெற்கே உள்ள லா அரௌகானியா, அதிக வெப்பநிலை, பலத்த காற்று மற்றும் வறட்சி காரணமாக வேகமாக பரவிய காட்டுத் தீ அலையை எதிர்கொண்டுள்ளது.
தீயணைப்பு குழுக்கள் தீயை அணைக்க போராடி வருவதால், பிராந்தியத்தின் பல பகுதிகளில் அதிகாரிகள் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.





