ஐரோப்பா

ஜெர்மனியில் வேலை செய்யாமல் ஏமாற்றும் வெளிநாட்டவர்களுக்கு உதவித்தொகை பறிபோகும் ஆபத்து

ஜெர்மனியில் அதிமான புலம்பெயர்ந்தோர் குடிமக்கள் உதவித்தொகையை நம்பியே வாழ்க்கை நடத்துவதாக CDU கட்சியின் தலைவர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார்.

இது நாட்டில் சமூக பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

பொதுமக்கள் இந்த சூழ்நிலையை நீண்ட காலத்திற்கு ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கருதுகின்றார்.

ஜெர்மனியில் உள்ள சுமார் 40 சதவீதம் அகதிகள் மற்றும் உக்ரைனியர்கள் வேலைக்கு செல்வதில்லை.

இந்நிலையில், அவர்கள் பெரும்பாலும் குடிமக்கள் உதவித்தொகையை பெறுகின்றார்கள்.

தங்கள் புகலிடம் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே அவர்கள் இந்த ஆதரவைப் பெறுன்கிறார்கள். அதற்கு முன், அவர்களுக்கு சிறிய புகலிட சலுகைகள் கிடைக்கின்றன.

இவ்வாறான சூழ்நிலையில், வேலை செய்ய மறுப்பவர்கள் அல்லது திட்டங்களில் பங்கேற்க மறுப்பவர்களின் சலுகைகள் இரத்து செய்யப்பட வேண்டும் என ஜென்ஸ் ஸ்பான் கூறுகின்றார்.

எனினும், இது போன்ற கடுமையான விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அடிப்படை ஆதரவு நிலை சட்டத்தால் அவை பாதுகாக்கப்பட வேண்டும் என SPD கட்சியை சேர்ந்த Bärbel Bas தெரிவிக்கின்றார்.

எவ்வாறாயினும், புதிய கூட்டணி ஒப்பந்தத்தின் கீழ் குடிமக்கள் உதவித்தொகை மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பான சட்டங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!