ஜெர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்படும் அபாயம்
ஜெர்மனியில் ஹம்பேர்க் நகரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து வெளிநாட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனிக்கு அகதியாக வந்த வெளிநாட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் நாடு கடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஹம்பேர்க் நகரத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜெர்மன் நாட்டினுடைய ஜனநாயக விழுமியத்தை மீறி செற்படுகின்றார்கள் என்று ஜெர்மனியின் உள் ஊர் ஆட்சி அமைச்சர் நென்சி பேசர் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பசுமை கட்சியுடைய தலைவரான ஓமி நோட் கூரி என்பவர் கருத்து தெரிவிக்கையில்,
இவ்வாறு ஜெர்மன் நாட்டுக்கு அகதியாக வந்தவர்கள் இவ்வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்களாக இருந்தால் இவர்களை உடனடியாக நாட்டை விட்டு கடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஆர்ப்பாட்டக்காரர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.