ஜெர்மனியில் தேர்தலையடுத்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ள வெளிநாட்டவர்கள்
ஜெர்மனியில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் பொது தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் புலம்பெயரந்தோர் மீது அதிக அழுத்தம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுப்படும் கட்சிகள் வெளிநாட்டவர்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து தமது வாக்கு வங்கிகளை அதிகரித்து வருகின்றனர்.
அதற்கமைய, ஜெர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களால் மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்களுக்கு எதிராக அவர்களை நாடு கடத்த வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் சம்பவங்களில் ஈடுப்படும் வெளிநாட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனியில் வதிவிட விசாவை வைத்து இருந்தால் அவர் 2 குற்றவியல் சம்பவங்களில் ஈடுப்படுவாறாயின் குறித்த நபரை நாட்டை விட்டு வெறியேற்ற வேண்டும் என கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய கட்சியின் பொது செயலாளர் காசல் லின்டன் தெரிவித்துள்ளார்.
குற்றவியல் சம்பவாங்களில் கொள்ளை, உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துதல், சட்டத்துக்கு மீறிய போதை பொருட்கள் பாவணை, பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது இரண்டு தடவைக்கு மேல் குற்றமிழைத்தால் அவர்களை உடன் நாடு கடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தற்கால வதிவிட விசா வைத்து இருக்கின்றவர்களை நாட்டை விட்டு கடத்த வேண்டிய நிலையில் இருந்தால் அவர்களும் நாடுகடத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியின் வெளிநாட்டவரின் சட்டம் 45 ஐ அவர் சுட்டிகாட்டியுள்ளார். மேலும் சட்டம் 45 இல் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் அதிகளவான சிரியா நாட்டவர்களே குற்றவியல் சம்பவங்களை புரிவதால் அவர்களை உடனடியாக நாடு கடந்த வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.