கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டவர் – சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி
வெளிநாட்டு பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதாகியுள்ளார்.
விழுங்கிய நிலையில் சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் ரக போதைப்பொருளைக் கடத்திவந்த வெளிநாட்டவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் சியேரா லியோனைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது.
சந்தேக நபரால் விழுங்கிய நிலையில் கடத்திவரப்பட்ட கொக்கேய்ன் அடங்கிய 56 வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.





