சிங்கப்பூரில் விபத்தில் சிக்கிய வெளிநாட்டு ஊழியர்கள் – நெகிழ வைத்த மருத்துவர்
சிங்கப்பூரில் விபத்தில் சிக்கிய இரு வெளிநாட்டு ஊழியர்களுக்கு விடுமுறையில் இருந்த சிங்கப்பூர் துணை மருத்துவர் ஒருவர் முதலுதவி சிகிச்சை அளித்து உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோகூர் பாருவில் விடுமுறைக்கு சென்றிருந்த அவர், விபத்தில் காயமடைந்த இரண்டு மலேசிய மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு முதலுதவி அளித்துள்ளார்.
விபத்து நடந்த இடத்தை கடந்து சென்ற அவர், விரைந்து சென்று உதவி வழங்கியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த மே 8 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் டெப்ராவ் என்ற இடத்தில் நடந்தது.
ஊழியர்கள் இருவரும் மோட்டார் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, கல்லில் மோதி கீழே கவிழ்ந்ததாக நேரில் பார்த்தவர்களின் சாட்சிகளின் படி கூறப்படுகிறது.
மேலும், ஊழியர்கள் வேலை நிமித்தமாக சிங்கப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
தாம் விடுமுறையில் இருந்தாலும் அடுத்தவர் உயிரை காப்பாற்ற ஓடி உதவிய அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன.