இலங்கை

இலங்கையில் பொதுத் தேர்தலை கண்காணிக்க களமிறங்கிய வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்

இலங்கையில் எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை கண்காணிப்பதற்காக 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

அதில் தெற்காசிய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களும் அடங்குவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் மேலதிகமாக 10 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளனர், இதில் ரஷ்யா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளின் கண்காணிப்பாளர்கள் உள்ளனர்.

அவர்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களைச் சந்தித்த, பின்னர் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை ஆரம்பிப்பார்கள்.

இதேவேளை, The Asian Network for Free Elections (ANFREL) சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளை சந்தித்து தமது தேர்தல் கண்காணிப்பு கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்