வெளிநாட்டுப் பிரஜையொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது
வெளிநாட்டுப் பிரஜையொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 9 கோடியே 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளைக் கடத்திவந்ததாகக் கூறப்படும் நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலம்பியாவிலிருந்து வருகை தந்த 66 வயதுடைய பொஸ்னிய நாட்டு பிரஜையொருவரே சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
குறித்த நபரிடமிருந்து இரண்டரை கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)