விரைவில் பீஜிங் பறக்கிறார் வெளிவிவகார அமைச்சர்?
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath , விரைவில் சீனாவுக்கு China பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி Wang Yi யின் குறுகிய நேர பயணமாக கடந்த திங்கட்கிழமை இலங்கை வந்து சென்றார்.
இதன்போது, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியை, அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று சந்தித்து பேச்சு நடத்தினார்.
இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கடிதம் ஒன்றை, சீன வெளிவிவகார அமைச்சரிடம் விஜித ஹேரத் கையளித்தார். இரு தரப்பு உறவு பற்றியும் கலந்துரையாடினார்.
இந்நிலையிலான சீனாவுடன் விரிவான பேச்சுகளை முன்னெடுக்கும் நோக்கில் அவர் பீஜிங் செல்கின்றார் என தெரியவருகின்றது.
எனினும், இது தொடர்பில் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.





