வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரித்துள்ளன – ஜனாதிபதி தெரிவிப்பு
இலங்கை தொடர்பில் நம்பிக்கை கட்டியெழுப்பட்டுள்ளது. அதனால்தான் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரித்துள்ளன என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
“ தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் தனியார் சொத்துகள் சூறையாடப்படும் என்ற மாயை உருவாக்கப்பட்டது.
ஆனால் அது போலி என்பது தற்போது நிரூபனமாகியுள்ளது. முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பட்டுள்ளது.
சிறந்த முதலீடுகளைப் பெறுவதற்குரிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் பற்றியும் புரளி கிளப்பட்டது.
இந்தியா, பாகிஸ்தான் போர் மூண்டால் இலங்கை பொருளாதாரம் விழுந்துவிடும் எனக் கூறினர். அமெரிக்காவின் வரிவிதிப்பின்போதும் இப்படியே கதைகள் கூறப்பட்டன.
ஆனால் நாட்டின் பொருளாதாரம் பற்றி இனிமேல் கவலையடையத் தேவையில்லை. அது ஸ்தீரப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கடன்களை குறைப்பதற்குரிய திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் மயமாக்கல் பற்றியும் கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.” – என்றார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க.





