அமெரிக்க வரலாற்றில் முதல் முறை – பதவியேற்க முன்னர் டிரம்பிற்கு தண்டனை
அமெரிக்காவின் ஜனாதிபதி பொறுப்பேற்கவிருக்கும் டொனல்ட் டிரம்ப்புக்கு நியூயோர்க் நீதிமன்றம் இம்மாதம் 10ஆம் திகதி தண்டனை விதிக்கவிருக்கிறது.
எனினும் அவருக்குச் சிறைத்தண்டனை விதிப்பதற்கு வாய்ப்பில்லை என்று நீதிபதி கூறியிருக்கிறார்.
78 வயதான டிரம்ப் பதவியேற்பதற்கு 10 நாள் முன்பாக அவருக்குத் தண்டனை விதிக்கப்படும் என்ற செய்தி வந்திருக்கிறது.
டிரம்ப் நேரடியாகவோ, காணொளி மூலமாகவோ நீதிமன்றத்தில் தோன்றலாம் என்று நீதிபதி கூறியிருக்கிறார்.
அமெரிக்க வரலாற்றில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்ததில்லை. நடப்பு ஜனாதிபதி அல்லது முன்னாள் ஜனாதிபதி குற்றவியல் குற்றச்சாட்டைச் சந்தித்ததில்லை.
டிரம்ப்பைச் சிறைக்கு அனுப்பத் தமக்கு விருப்பமில்லை என்றும் நிபந்தனைகள் ஏதும் விதிக்காமல் நிரபராதி என்று தீர்ப்பளிப்பதே சிறந்த தீர்வாக இருக்கமுடியும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
நீதிபதியின் கருத்து பற்றிக் கருத்துரைத்த டிரம்ப்பின் பேச்சாளர், அது ஒரு வழக்கும் இல்லை அதற்குச் சட்டத்தில் இடமும் இல்லை என்றார்.