யாழில் கோர விபத்து – பரிதாபமாக உயிரிழந்த உதைப்பந்தாட்ட வீரர்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு உடுத்துறையைச் சேர்ந்த செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும் உதைப்பந்தாட்ட நடுவருமான யூட் என்ற 27 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
தனது விளையாட்டுக் கழகத்திற்கான சீருடைகளை யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொண்டு , மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது அவர் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
செம்மணி பகுதியில் எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை, குறித்த விபத்து இடம்பெற்ற வேளை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.