கனடாவில் உயர்ந்தது உணவு பொருட்களின் விலை – காரணம் வெளியிட்ட நிபுணர்கள்
கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரித்து வருவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
செப்டம்பரில், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 4.0 சதவீதம் அதிகமாக இருந்தன.
மோசமான வானிலை, வரிகள் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோப்பி (Coffee) விலையும் 41.0 சதவீதத்தால் அதிகரித்தது.
ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. உதாரணமாக, மாட்டு இறைச்சி விலை 17.4 சதவீதத்தால் உயர்ந்தது. கொட்டைகள் (nuts) விலைகள், 15.7 சதவீதம் உயர்ந்தது.
கனடா மற்றும் அமெரிக்காவில் நிலவிய வறட்சி மற்றும் வறண்ட வானிலையே இதற்குக் காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது பயிர்கள் மற்றும் கால்நடைகளின் எண்ணிக்கையைக் குறைத்ததோடு, விவசாயிகளின் செலவுகளையும் அதிகரித்தது.
இதேவேளை, இந்த விலை உயர்வு காரணமாக அதிகமான மக்களுக்குத் தற்போது உதவி தேவைப்படுகிறது.





