இந்தியாவில் உணவு தாமதம் – திருமணத்தை நிறுத்திய மணமகனின் அதிர்ச்சி செயல்
இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகன் ஒருவர் உணவு தாமதமானதால் திடீரென தனது திருமணத்தை நிறுத்தியதாகவும், பின்னர் அதே நாளில் அவர் உறவினர் ஒருவரை திருமணம் செய்ததாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் பொலிஸ் நிலையம் சென்று, விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மாப்பிள்ளை வீட்டாருக்கு ரூ.1.5 லட்சம் கொடுத்ததாக தெரிவித்தனர்.
திருமணத்தின் போது மணமகனுக்கு உணவு வழங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டதாக மணமகள் கூறுகிறார்.
நண்பர்கள் கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த அவர், பின்னர் மணமகள் வீட்டாரையும், உறவினர்களையும் திட்டியுள்ளனர்.
கிராமப் பெரியவர்கள் தலையிட்டு பிரச்சினையை தீர்க்க முயன்றனர், ஆனால் மணமகன் திருமணம் செய்ய மறுத்து தனது வீட்டிற்குத் திரும்பினார்.
மணமகளின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருந்த நிலையில், அதே நாளில் மணமகன் தனது உறவினரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.