அரசாங்கத்துடன் இணைய தயாராகும் பொன்சேகா
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஆளும் கட்சியில் இணையத் தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் கருத்து வேறுபாடு கொண்டுள்ள தம்மை கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குமாறு அவர் கட்சித் தலைவரிடம் ஏற்கனவே யோசனை முன்வைத்துள்ளார்.
அண்மையில் இரண்டு முன்னாள் இராணுவத் தளபதிகள் சமகி ஜன பலவேகவில் இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பில் பொன்சேகா மிகுந்த கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதன் பின்னர் சரத் பொன்சேகா அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளதாகவும் தகவல் பரவி வருகின்றது.
எவ்வாறாயினும், பொன்சேகா அது தொடர்பில் இதுவரையில் எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை.
(Visited 5 times, 1 visits today)