மூடுபனியால் விமானம் மற்றும் ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிப்பு; அடுத்த 3 நாட்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இன்று காலை வெப்பநிலை 4.2 டிகிரி செல்சியஸாகக் குறைந்த நிலையில், இந்த குளிர்காலத்தின் மிகக் குளிர்ந்த நாளாக இது பதிவாகியுள்ளது.
கடும் மூடுபனி மற்றும் குளிர் அலை காரணமாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
கடும் குளிர் காரணமாக மக்கள் அதிகளவில் மின் சாதனங்களைப் பயன்படுத்துவதால், டெல்லியின் மின்சாரத் தேவை முன் எப்போதும் இல்லாதவாறு 6,087 மெகாவாட்டாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அடர் மூடுபனி காரணமாக ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துகளில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த 3 நாட்களுக்குக் கடும் குளிர் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது





