நிவாரணப் பயனாளிகளின் குடும்பங்களின் எண்ணிக்கையை 24 லட்சமாக அதிகரிப்பதில் கவனம்
இக்கட்டான பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு நிவாரணப் பயனாளிகளின் எண்ணிக்கை 24 இலட்சமாக அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சேமிப்புத் திட்டத்தை வினைத்திறனுடன் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக அரச வங்கிகளின் பிரதிநிதிகளுடன் நிதியமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
20 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அஸ்வெசும நலத்திட்ட உதவித் திட்டம் தொடங்கப்பட்டது.
இதன் மூலம் 14 இலட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பெறப்பட்ட 11 லட்சத்துக்கும் அதிகமான மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
இப்பணிகள் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவுபெறும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.