வெனிசுலாவின் வான்வெளியில் பறப்பது ஆபத்து – விமான நிறுனங்களை எச்சரிக்கும் அமெரிக்கா!
ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் வெனிசுலாவை (Venezuela) அண்டிய கடற்பகுதியில் போர் கப்பலை நிறுத்தியுள்ள நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்பு அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் விமானங்கள் பறக்கும்போது ஆபத்துக்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முதல் குறித்த பகுதியில் பயணிப்பதை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. டெல்டா ஏர் லைன்ஸும் குறித்த பகுதியூடான பயணத்தை நிறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ஃபெடரல் ஏவியேஷனின் உத்தரவுப்படி, விமான நிறுவனங்கள் 72 மணிநேரத்திற்கு முன்பு அப்பகுதியூடாக பயணிப்பதை நிறுத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது.
வெனிசுலா அரசாங்கமானது மிகப் பெரிய இராணுவ பயிற்சிகளை நடத்தியுள்ளதாகவும் ஃபெடரல் ஏவியேஷன் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையிலேயே பாதுகாப்பு எச்சரிக்கை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சமீபத்திய மாதங்களில் இப்பகுதியில் அமெரிக்கா இராணுவத்தை குவித்து வருகிறது. இதில் அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பல், குறைந்தது எட்டு பிற போர்க்கப்பல்கள் மற்றும் F-35 விமானங்களையும் நிலைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




