அமெரிக்காவில் சிறுவனின் விபரீத முடிவு – AI மீது வழக்கு தாக்கல் செய்த தாய்
அமெரிக்காவில் “Character.AI” எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் மீது ஒரு பெண் வழக்குத் தொடுத்துள்ளார்.
அவருடைய 14 வயது மகன் பிப்ரவரி மாதம் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்த நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் தானியக்க உரையாடல் வசதி (chatbot) உண்மையான நபரைப் போலவே உரையாடுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தம் மகன் பாலியல் ரீதியான உரையாடல்கள், தற்கொலை பற்றிய சிந்தனைகள் போன்றவற்றில் ஈடுபட அந்தச் சேவை காரணம் என்று தாய் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்திற்கு “Character.AI” நிறுவனம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தது.
மேலும் 18 வயதுக்குக் குறைந்த பயனீட்டாளர்களைப் பாதுகாக்கப் புதிய முயற்சிகள் எடுப்பதாக குறிப்பிட்டுள்ளது.
“Character.AI” நிறுவனர்கள் முன்னதாக Googleஇல் பணிபுரிந்தவர்களாகும்.
எனவே Googleக்கும் அந்த உரையாடல் சேவையின் உருவாக்கத்தில் பங்குண்டு என்று தாய் வலியுறுத்தினார். எனினும் Google குற்றச்சாட்டை மறுத்தது.