ஜப்பானில் நீண்டகாலமாக பயன்பாட்டில் இருந்த பிளாப்பி டிஸ்க்குகள் விடைபெற்றன!
ஜப்பானில் நீண்டகாலமாக பயன்பாட்டில் இருந்து பிளாப்பி டிஸ்க்குகள் பாவனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
காலாவதியான சேமிப்பக சாதனங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்திடம் ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு அந்நாட்டு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டது.
இதற்கமைவாக தற்போது பிளாப்பி டிஸ்க்குகள் பாவனையில் இருந்து விடைபெற்றுள்ளன.
டிஜிக்டல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள டாரோ கோனோ பழைய தொழில்நுட்பத்தை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
ஜப்பான், சமீபத்திய ஆண்டுகளில் டிஜிட்டல் மாற்றத்தின் உலகளாவிய அலையில் பின்தங்கியுள்ளது, ஏனெனில் அங்கு மாற்றத்திற்கு ஆழ்ந்த எதிர்ப்பு உள்ளது.
எடுத்துக்காட்டாக, பணியிடங்கள் மின்னஞ்சல்களை விட தொலைநகல் இயந்திரங்களை ஆதரிக்கின்றன – இந்த இயந்திரங்களை அரசாங்க அலுவலகங்களில் இருந்து அகற்றுவதற்கான முந்தைய திட்டங்கள் புஷ்பேக் காரணமாக ரத்து செய்யப்பட்டன.
இவ்வாறான ஒரு பின்னனியிலேயே இந்த பிளாப்பி டிஸ்க்குகள் நீக்கப்பட்டுள்ளன.